ரவி » பொது

  1. ravidreams
    ரவி

    நம்மள மாதிரி பின்னவீனத்துவ அறிவிலிகளுக்குப் புரியுற மாதிரி எழுதுற தரமான தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் 4,5 பேர், அவர்களோட பரிந்துரைக்கத்தக்க படைப்புகள் சில சொல்லுங்களேன். அடுத்த முறை ஊருக்குப் போகும் போது வாங்கிப் படிக்கணும்

    Posted 2 years ago #
  2. எழில்வரதன் படிச்சுப் பாருங்க!
    எனக்கு தற்போதைக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்.
    இவரது புத்தகங்கள் -

    கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன் - 125 - வம்சி
    ஆலமர இடையழகு - KK books - 100
    ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு - சந்தியா பதிப்பகம் - 100
    எழில்வரதன் கதைகள் - விகடனில் 'கதை கதைம்யாம்...' என்ற தொடரில் எழுதிய 18 கதைகள்
    அருமையான எழுத்தாளர்!
    இவரது 14 சிறுகதைகளை கீற்று தளத்தில் உள்ளன (http://www.keetru.com/literature/ezhilvarathan_index.php)

    படித்துப் பார்த்துவிட்டு சொல்லவும்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    Posted 2 years ago #
  3. வெங்கட்ரமணன் இதில் ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு கவிதைத் தொகுப்பா அல்லது கதைத் தொகுப்பா??

    ஏன்னா தலைப்பே கவித மாதிரி இருக்கு அதான். :)

    Posted 2 years ago #
  4. ravidreams
    ரவி

    வெங்கட்ரமணன் - பதிவுகளைத் தொடர்ந்து உங்களை இங்கே காணவும் ரொம்ப மகிழ்ச்சி. விரிவான பட்டியலுக்கு நன்றி. முதல்ல, நீங்க சொன்ன கீற்றுல இருக்க கதைகளைப் படிச்சுட்டு வர்றேன்.

    Posted 2 years ago #
  5. நந்தா!
    'ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு' கதைத் தொகுப்புதான் (தொகுப்பில் உள்ள கதையில் ஒன்று)! எழில்வரதனின் தனித்துவங்களில் ஒன்று அவரது நீளமான கதைப் பெயர்கள் - சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை, பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும், கடிகாரம் நிற்பதற்கு ஒரு வினாடி முன்பு, கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை, புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள், ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு... இப்படி எல்லாமே நீள்பெயர்கள்! தமிழில் அருகிப்போன அங்கத நடையில் இவரது ராஜபாட்டை அமர்க்களமாயிருக்கும் (என்ன கதைப்பெயர்கள் போல கதைகளும் அநியாயத்திற்கு நீளம்!) நீங்களும் படித்துப் பாருங்கள்!

    Posted 2 years ago #
  6. தலைப்புகளே புத்தகங்களைப் படிக்கத் தூண்டுகின்றன....

    அடுத்த முறை எழில் வரதன் தொகுப்புகளை ஒரு கை பார்த்து விட வேண்டும். :)

    Posted 2 years ago #
  7. ச.தமிழ்ச்செல்வன், யூமாவாசுகி, அழகியபெரியவன், ஆதவன் தீட்சன்யா, சு.வெங்கடேசன், ஜே.டி.குரூஸ், இமயம், கு.உமாதேவி, அ.வெண்ணிலா, இப்படி நீள்கிறது பெயர். எதை சொல்ல எதை விட...! எஸ்.ராமகிருஷ்ணன், ஜெமோ போன்றவர்களும் தற்கால எழுத்தாளர்கள் என்றால் படிக்கலாம்.

    இரந்து போன.. கந்தர்வன், பா.சிங்காரம்(இவர் எழுதிய நாவல்கள் 2 மட்டுமே) போன்றவர்களும் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவர்களே!

    Posted 2 years ago #
  8. தமிழ்ச்செல்வியின் கீதாரி, அளம் இரண்டும் படித்துவிட்டு அவரது பிற நாவல்களையும் வாங்கிப்படிக்கும் ஆவலில் இருக்கேன்.

    நீங்களும் படிச்சுப்பாருங்க.

    Posted 2 years ago #
  9. அருள் அடுத்த முறை வரும் போது அந்த ரெண்டு புக்கையும் எடுத்துட்டு வரலைன்னா வேளச்சேரியிலயே காலை வைக்க்க விட மாட்டேன். சொல்லிட்டேன்.

    Posted 2 years ago #
  10. நந்தா,

    நான் அடுத்த முறை வேளச்சேரி வரும்போது என்ன உள்ளங்கைல தாங்குவீங்கறத இப்படியா சொல்லனும்?

    கி.ரா வோட தொகுப்புல வந்த கரிசல் காட்டுக்கதைகள் ஒரு நல்ல தொகுப்பு. 20 ஆசிரியர்களோட 20 கதைகள். எல்லாமே வட்டார வழக்கு நடைல அந்த பகுதி மக்களோட வாழ்க்கை, பண்ப சொல்ற மாதிரி....

    சிறுகதைகள் விருப்பம்னா இதையும் படிச்சுப்பாருங்க!

    Posted 2 years ago #
  11. //சிறுகதைகள் விருப்பம்னா இதையும் படிச்சுப்பாருங்க!//

    ஹ்க்கும் என்னமோ கையில வெச்சுக்கிட்டு படிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற மாதிரி சொல்லிட்டிருக்கீங்க. புத்தகத்தோட எண்ணிக்கையில இன்னொண்ணு அதிகமாய்டுச்சு. அதையும் சேர்த்து எடுத்துட்டு வாங்க.

    Posted 2 years ago #
  12. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா எழுதிய குறுநாவல்.

    இந்த குறுநாவலை நம்மில் பலர் படித்திருக்கலாம். ஆனாலும் ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் ஒரு புது உணர்வு ஏற்படுகிறது என்பது நிஜம்.

    இந்த நாவலின் மையக்கருத்து ஜல்லிக்கட்டுப் பற்றியது. மாடு அணைவதை இவ்வளவு, விவரமாகவும், விறுவிறுப்பாகவும், அழகாகவும் யாராவது இதுவரை கையாண்டிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

    ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு ஒருநாள் கிரிக்கெட் மாட்ச் (வேண்டாம்) ஒரு கால்பந்தாட்ட பைனலை பார்ப்பது போன்ற உணர்வுடன் நம்மைக் கொண்டு செல்கிறது.

    வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் லாவகத்திற்காக ஒரு சபாஷ்

    மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.

    இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன் எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது.

    ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

    40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

    Posted 2 years ago #
  13. d
    Member

    ஆதவனின் நாவல்களான காகிதமலர்கள் மற்றும் என் பெயர் ராமசேஷன் ஆகியவற்றை படிக்கலாம். இவற்றை விடவும் ஆதவனின் சிறுகதைகள் மிகவும் அருமையாக உள்ளன. ஆதவனின் கதைகள் இளைஞர்களை மையமாக கொண்டிருக்கின்றன. இவருடைய அத்தனை கதைகளிலும் மனம் தனக்குள் சதா பேசிக் கொண்டிருக்கிறது. (uyirmmai has published his 2 novels. Kizhakku has published all of his short stories).

    Posted 3 months ago #

Reply

You must log in to post.