இதற்கு காரணம் உங்களின் வலைசேவை வழங்கும் நிறுவனத்தின் DNS பதிவுகள் (records) மாறுவதில் ஏற்படும் கால தாமதமே
தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் தங்களின் வழங்கி நிறுவனம் (Server Provider)(புது வழங்கி நிறுவனமோ அல்லது பழைய வழங்கி நிறுவனமோ) அல்ல . அதற்கு காரணம் தங்களின் இணையசேவை அளிக்கும் நிறுவனம்தான். (Internet Provider)
உங்கள் தளம் மட்டும் அல்ல, என் தளத்தை நான் ஒரு வழங்கியிலிருந்து வேறு வழங்கிக்கு மாற்றினாலோ, ரவி அவரின் தளத்து வேறு வழங்கிக்கு மாற்றினாலோ உங்களுக்கு அது தாமதாமாகத்தான் தெரியும்
இதனால் தான் opendms பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்
தங்களின் வலைசேவை வழங்குபவர்கள் ஒரு DNS எண்ணை அளித்திருப்பார்கள். தங்களின் கணினியில் அதை உள்ளீடு செய்யாமல்
Preferred DNS Server 208.67.222.222 and
Alternate DNS Server 208.67.220.220
என்று உள்ளீடு செய்யுங்கள்.
வித்தியாசத்தை உணர்வீர்கள் :) :)
--
பின் குறிப்பு : இது என் அனுபவத்தில் கற்ற பாடம்